என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரம்மோஸ் காற்றோட்டம்
நீங்கள் தேடியது "பிரம்மோஸ் காற்றோட்டம்"
இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.
புதுடெல்லி:
இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறி விலகிச் சென்றும் தாக்கும் ஆற்றல் படைத்தது.
கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக தரையில் இருந்து பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று ஏவி பிரமோஸ் ஏவுகணை இன்று பரிசோதிக்கப்பட்டது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாககவும் பிரமோஸ் ஏவுகணைவெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாககவும் இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
×

X